Popular Posts

ஏப்ரல் 27, 2012

எல்லா கடவுள்களும் சிறு தெய்வங்களும் உண்மையா ?  பகுதி 2 

 கருப்பண்ணசாமி,முனீஸ்வரன் ,சுடலை மாடன்

போக முனிவர் ,அகத்திய முனிவர் ,புலிப்பாணி சித்தர் நூல்களில் கண்டபடி 
கருப்பண்ணசாமி,முனீஸ்வரன் ,சுடலை மாடன் ஆகியோர்களின் உறைவிடம் வழிபாடு முறைகள்,வசியப்படுத்தும் முறை போன்றவைகளை தெரிவித்து இருப்பதால் மேற்கண்ட காவல் தெய்வங்கள் இருப்பது உண்மையே .

இதனால் தெரிவது என்னவென்றால் அத்தனை தெய்வங்களும் கிராம தேவ்வதைகளும் இந்த பூமியில் இருந்தவர்களே,இருந்து எல்லோரையும் வழி நடத்திக்கொண்டு வாழ்ந்து இன்றும் அருவமாக அருள் வழங்குபவர்களே என்று  சித்தர்களின் சான்றின்படி உறுதிபட அறிந்து தெளிவடைவோம்.விரும்பிய தெய்வத்தை வணங்கி வாழ்த்துவோம்.
  
 
 

எல்லா கடவுள்களும் தேவதைகளும் உண்மையே-1

இந்து மதத்தில்  மட்டும் இத்தனை  கடவுள்கள், தேவதைகள்,சிறு தெய்வங்கள் வழிபாடு உள்ளதே என பலரும் அடிக்கடி கேட்கிறார்களே .அவர்களுக்கான பதிவு இது.

போக மகரிஷி 7000 , புலிப்பாணி ஜாலம்,அகத்தியர் பாடல்கள் முதலான நூல்களில் இதற்கான விளக்கத்தைக்காணலாம்.

1 ) சிவபெருமான் கயிலாயத்தில் இருக்கிறார்.அவரே அதனை சித்தவிதிகளுக்கும் ஆதிஆனவர்.அவர் அந்த ரகசியங்களை நந்தி தேவருக்கு சொல்ல அவர் மூலம் மற்ற சித்தர்களுக்கு பல்வேறு விஷயங்கள் பரவின.
எனவே சிவன்,பார்வதி,நந்தி ஆகியோர் இருப்பது உண்மையே.
2 ) சுப்ரமணியர் என்ற முருகன் தான் அகத்திய முனிவரின் குரு ஆவார். இதனை சுப்ரமணியர்  ஞானம் என்ற நூல் தெரிவிக்கிறது.இத்தனை எழுதிய முருகன்    ஒரு சித்தர்   என்பது உண்மை.
3 ) போகர் தனது நூலில் விநாயகர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சிறப்பாக ஆதி நாளில் வாழ்ந்த மிக சிறந்த சித்தர் விநாயகர் எனவும் தன்நிகரற்று விளங்கினார் எனவும் ஒருகையில் ஒடிந்த தந்தமும் மறு கையில் பாசமும் கொண்டு அவர் சமாதியில் இருந்ததை தாம் நேரில் கண்டதாக உறுதிபட கூறுகிறார் முனிவர்.அவரை மக்கள் தெய்வமாக்கி வழிபடுகின்றார் எனவும் 
கூறுகிறார்.விநாயகரும்கடவுளாக வழிபட பெரும் ஒரு சித்தர் என்பதும் உண்மையே.
4 )விஷ்ணு பகவானின் சமாதியில்  அசரிரி  வாக்கு கேட்டதாகவும்,கண்ண பிரானின் சமாதி ,மார்க்கண்டேயரின் சமாதி ,ரேனுகையின்( இன்றைய ரேணுகா தேவி )சமாதிகளை நேரில் கண்டதாக தெரிவிக்கிறார் போக முனிவர். ஆகவே விஷ்ணு,கிருஷ்ணன்,ரேணுகா தேவி ஆகிய தெய்வங்கள் இருப்பது உண்மையே.
5 )  புலிப்பாணி முனிவர் தனது நூலில் பிரத்யங்கிரா தேவியின் பெருமைகளை விரிவாக விளக்கி இருக்கிறார்.இந்த தேவியை வழிபாடு செய்பவன் சர்வ வல்லமை பெற்றவனாக விளங்குவான் என்று தெரிவிக்கிறார்.மேலும் நரசிம்ம ரூபத்தையும் அதன் பெருமையையும் தெரிவித்துஇருக்கிறார். இந்த இரண்டு தெய்வங்களிடம் தஞ்சம் அடைந்தவர்களின் ஏவல்/பில்லி/சூனியம் நீங்கி விடும் என்பது இன்றைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.   எனவே நரசிம்மர் / பிரத்யங்கிரா தேவி போன்ற தெய்வங்கள் இருப்பது உண்மையே.
தொடர்ச்சி அடுத்த பதிவில் 













சித்தர்கள் விளையாட்டு 

இந்த சித்தர்கள் இருக்காங்களே,அவங்களை ஒரு வரையறைக்குள்ள கொண்டு வந்து இப்படிதான் செய்திருப்பாகளோ அப்படின்னு ஒரு முடிவுக்கு வர முடியாது போல. எப்படி பாத்தாலும் ஒரு ரகசியம் ஒரு அதிசயம் ஒரு விடுகத அப்படின்னு கொண்டு போறாங்களே அந்த மர்மத்த என்னனு சொல்ல,அடி ஆத்தி.
ஒருத்தரு திருப்பதி மலையானின் இடத்துல ஆனந்தமா இருக்காரு.ஒருத்தர் தான் செய்த ரசவாத தங்கத்த எல்லாம் பள்ளி கொண்டபெருமாளிடம் ஒப்படைத்து விட்டு அங்கேயே இருக்காராம்.ஒருத்தரு பெரிய கோயில் உள்ளே இருக்காராம்.ஒருத்தர் பெருமாள் கூட பேசியிருக்கார்.ஒருத்தர் ஜோசியத்துல புலி.

அது போக  அசைவத்தயும் வச்சு காயகல்பமும் மருந்துகளும் செய்திருக்காங்க.கேவலமான   இரும்பையும் பஸ்பமாகி சாப்பிட வச்சு இருக்காங்க.முட்டை தோலையும்,குதிரை லத்தி,கழுதை சிறுநீரையும் ஆந்தை மலம்,கிளிஞ்சல் போன்றவற்றின் மூலம் ரசவாதம், மருத்துவம் செய்து இருக்காங்க.ஆச்சர்யமா இருக்குதுங்க.

நம்ம சாதாரணமா பாக்குற மரம் செடி பூவுக்கு அவளவு மதிப்பு குடுத்து இருக்காக.முறைப்படி சாப்டா நல்லா இருக்கலாமாம்.

பல நாடு நகரங்கள விசுக்குனு சுத்தி வந்தாங்களாம்.ஆச்சர்யமா இருக்கு 

எல்லாம் அந்த சித்தர்களின் மகிமையை என்னனு சொல்ல ,எதுன்னு சொல்ல





 



























































































































































































 

ஓம் சிவ சிவ ஓம் 

மிஸ்டிக் செல்வம் 

அய்யா மிஸ்டிக் செல்வம் அவர்கள் இந்த மந்திரத்தை வெளியிட்டு பிரபலப்படுத்த விரும்பி அது நடந்தும் வருகிறது.

தினமும் ஜெபிப்போம் ஓம் சிவ சிவ ஓம் 

இறைவனடிமை