Popular Posts

ஏப்ரல் 27, 2012

எல்லா கடவுள்களும் சிறு தெய்வங்களும் உண்மையா ?  பகுதி 2 

 கருப்பண்ணசாமி,முனீஸ்வரன் ,சுடலை மாடன்

போக முனிவர் ,அகத்திய முனிவர் ,புலிப்பாணி சித்தர் நூல்களில் கண்டபடி 
கருப்பண்ணசாமி,முனீஸ்வரன் ,சுடலை மாடன் ஆகியோர்களின் உறைவிடம் வழிபாடு முறைகள்,வசியப்படுத்தும் முறை போன்றவைகளை தெரிவித்து இருப்பதால் மேற்கண்ட காவல் தெய்வங்கள் இருப்பது உண்மையே .

இதனால் தெரிவது என்னவென்றால் அத்தனை தெய்வங்களும் கிராம தேவ்வதைகளும் இந்த பூமியில் இருந்தவர்களே,இருந்து எல்லோரையும் வழி நடத்திக்கொண்டு வாழ்ந்து இன்றும் அருவமாக அருள் வழங்குபவர்களே என்று  சித்தர்களின் சான்றின்படி உறுதிபட அறிந்து தெளிவடைவோம்.விரும்பிய தெய்வத்தை வணங்கி வாழ்த்துவோம்.
  
 
 

எல்லா கடவுள்களும் தேவதைகளும் உண்மையே-1

இந்து மதத்தில்  மட்டும் இத்தனை  கடவுள்கள், தேவதைகள்,சிறு தெய்வங்கள் வழிபாடு உள்ளதே என பலரும் அடிக்கடி கேட்கிறார்களே .அவர்களுக்கான பதிவு இது.

போக மகரிஷி 7000 , புலிப்பாணி ஜாலம்,அகத்தியர் பாடல்கள் முதலான நூல்களில் இதற்கான விளக்கத்தைக்காணலாம்.

1 ) சிவபெருமான் கயிலாயத்தில் இருக்கிறார்.அவரே அதனை சித்தவிதிகளுக்கும் ஆதிஆனவர்.அவர் அந்த ரகசியங்களை நந்தி தேவருக்கு சொல்ல அவர் மூலம் மற்ற சித்தர்களுக்கு பல்வேறு விஷயங்கள் பரவின.
எனவே சிவன்,பார்வதி,நந்தி ஆகியோர் இருப்பது உண்மையே.
2 ) சுப்ரமணியர் என்ற முருகன் தான் அகத்திய முனிவரின் குரு ஆவார். இதனை சுப்ரமணியர்  ஞானம் என்ற நூல் தெரிவிக்கிறது.இத்தனை எழுதிய முருகன்    ஒரு சித்தர்   என்பது உண்மை.
3 ) போகர் தனது நூலில் விநாயகர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சிறப்பாக ஆதி நாளில் வாழ்ந்த மிக சிறந்த சித்தர் விநாயகர் எனவும் தன்நிகரற்று விளங்கினார் எனவும் ஒருகையில் ஒடிந்த தந்தமும் மறு கையில் பாசமும் கொண்டு அவர் சமாதியில் இருந்ததை தாம் நேரில் கண்டதாக உறுதிபட கூறுகிறார் முனிவர்.அவரை மக்கள் தெய்வமாக்கி வழிபடுகின்றார் எனவும் 
கூறுகிறார்.விநாயகரும்கடவுளாக வழிபட பெரும் ஒரு சித்தர் என்பதும் உண்மையே.
4 )விஷ்ணு பகவானின் சமாதியில்  அசரிரி  வாக்கு கேட்டதாகவும்,கண்ண பிரானின் சமாதி ,மார்க்கண்டேயரின் சமாதி ,ரேனுகையின்( இன்றைய ரேணுகா தேவி )சமாதிகளை நேரில் கண்டதாக தெரிவிக்கிறார் போக முனிவர். ஆகவே விஷ்ணு,கிருஷ்ணன்,ரேணுகா தேவி ஆகிய தெய்வங்கள் இருப்பது உண்மையே.
5 )  புலிப்பாணி முனிவர் தனது நூலில் பிரத்யங்கிரா தேவியின் பெருமைகளை விரிவாக விளக்கி இருக்கிறார்.இந்த தேவியை வழிபாடு செய்பவன் சர்வ வல்லமை பெற்றவனாக விளங்குவான் என்று தெரிவிக்கிறார்.மேலும் நரசிம்ம ரூபத்தையும் அதன் பெருமையையும் தெரிவித்துஇருக்கிறார். இந்த இரண்டு தெய்வங்களிடம் தஞ்சம் அடைந்தவர்களின் ஏவல்/பில்லி/சூனியம் நீங்கி விடும் என்பது இன்றைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.   எனவே நரசிம்மர் / பிரத்யங்கிரா தேவி போன்ற தெய்வங்கள் இருப்பது உண்மையே.
தொடர்ச்சி அடுத்த பதிவில் 













சித்தர்கள் விளையாட்டு 

இந்த சித்தர்கள் இருக்காங்களே,அவங்களை ஒரு வரையறைக்குள்ள கொண்டு வந்து இப்படிதான் செய்திருப்பாகளோ அப்படின்னு ஒரு முடிவுக்கு வர முடியாது போல. எப்படி பாத்தாலும் ஒரு ரகசியம் ஒரு அதிசயம் ஒரு விடுகத அப்படின்னு கொண்டு போறாங்களே அந்த மர்மத்த என்னனு சொல்ல,அடி ஆத்தி.
ஒருத்தரு திருப்பதி மலையானின் இடத்துல ஆனந்தமா இருக்காரு.ஒருத்தர் தான் செய்த ரசவாத தங்கத்த எல்லாம் பள்ளி கொண்டபெருமாளிடம் ஒப்படைத்து விட்டு அங்கேயே இருக்காராம்.ஒருத்தரு பெரிய கோயில் உள்ளே இருக்காராம்.ஒருத்தர் பெருமாள் கூட பேசியிருக்கார்.ஒருத்தர் ஜோசியத்துல புலி.

அது போக  அசைவத்தயும் வச்சு காயகல்பமும் மருந்துகளும் செய்திருக்காங்க.கேவலமான   இரும்பையும் பஸ்பமாகி சாப்பிட வச்சு இருக்காங்க.முட்டை தோலையும்,குதிரை லத்தி,கழுதை சிறுநீரையும் ஆந்தை மலம்,கிளிஞ்சல் போன்றவற்றின் மூலம் ரசவாதம், மருத்துவம் செய்து இருக்காங்க.ஆச்சர்யமா இருக்குதுங்க.

நம்ம சாதாரணமா பாக்குற மரம் செடி பூவுக்கு அவளவு மதிப்பு குடுத்து இருக்காக.முறைப்படி சாப்டா நல்லா இருக்கலாமாம்.

பல நாடு நகரங்கள விசுக்குனு சுத்தி வந்தாங்களாம்.ஆச்சர்யமா இருக்கு 

எல்லாம் அந்த சித்தர்களின் மகிமையை என்னனு சொல்ல ,எதுன்னு சொல்ல





 



























































































































































































 

ஓம் சிவ சிவ ஓம் 

மிஸ்டிக் செல்வம் 

அய்யா மிஸ்டிக் செல்வம் அவர்கள் இந்த மந்திரத்தை வெளியிட்டு பிரபலப்படுத்த விரும்பி அது நடந்தும் வருகிறது.

தினமும் ஜெபிப்போம் ஓம் சிவ சிவ ஓம் 

இறைவனடிமை 


ஏப்ரல் 07, 2012

நானும் போகர் 7000  PDF ஐ கோப்பி பேஸ்ட் பண்ணி அர்த்தம் எழுதலாம்னு பார்த்தா,முடியவே இல்லைங்கோ 
வேறு விதமா முயற்சி பண்ணி பார்க்குறேன் 
அதுக்கு சிதார் போக முனி உதவி செய்யணும் 

ஏப்ரல் 06, 2012

சித்திகளைப் பற்றி 

ஏராளமான விபரங்களைப் பெரும் பெரும் சித்தர்கள் எழுதியுள்ளார்கள். தாயுமானவரின் மிகப் பிரபலமான 'தேஜோமயானந்தப் பத்து'  பாடல்களில் ஒன்றாகிய 'கந்துக மதக் கரி' பாடலில் ஒரு பட்டியலைக் காணலாம்.

"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
    கரடி,வெம்புலி வாயையும்
     கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
    கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
    வேதித்து விற்று உண்ணலாம்;
     வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
    விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
    சா£ரத்திலும் புகுதலாம்;
     ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
    தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
    திறம் அ¡¢து! சத்து ஆகி என்
     சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
    தேஜோ மய ஆனந்தமே!

தாயுமானவர்

மதயானையை அடக்கிவிடலாம்;
கரடி, புலி வாயைக்கட்டலாம்;
சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்;
பாம்பை எடுத்து ஆட்டலாம்;
இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி
வாழ்க்கை நடத்தலாம்;
மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்;
தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்;
காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்;
கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்;
ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்;
அக்கினிஸ்தம்பனவித்தை பு¡¢ந்து நெருப்பின்மேல் இருக்கலாம்;
ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.

போகர் ஏழாயிரத்தில்
மூளை அறுவை சிகிச்சை

    'போகர் ஏழாயிரம்' என்றொரு நூல். சித்தர் போகர் எழுதியதாகக் கூறப்படுவது. அந்த நூலைப் பற்றிய அறிமுகம், விமரிசனம் முதலியவற்றை இன்னொரு முறை சொல்கிறேன்.
ஏழாயிரம் பாடல்கள் அல்லவா! விமரிசனம் என்பது சும்மா இல்லையே!

                   அந்த ஏழாயிரத்தில் எவ்வளவோ அபூர்வமான விஷயங்கள்
ஒளிந்திருக்கும். போகரின் வழக்கம் ஒரு தினுசு. ஏதாவது ஒரு பொருளைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிக்கொண்டே வருவார். திடீரென்று வேறு ஏதாவது ஒரு சிறு வரலாறு, சம்பவம், கதை
அதில் குறிக்கிடும்.

                    வரிசையாகப் படித்துக்கொண்டே வந்தால்தான் அந்த மாதிரி நடுப்பட்ட இடைப்பட்ட விஷயங்களெல்லாம் தட்டுப்படும். தட்டுப்பட்டாலும் கூட அந்த பாடல் என்ன சொல்கிறது என்பது எளிதில் மட்டுப்படாது.

                    பல விஷயங்களைக் குறித்து வைக்காமல் விட்டு விட்டேன். அவற்றையெல்லாம்
இப்போது தேடுவது என்பது மிகச் சிரமமான செயல். நினைவில் அந்த விஷயம் இருக்கும்.
ஆனால் அது எங்கிருந்து வந்தது  என்பதோ அதன் தொடர்புகளோ தெரியாமலிருக்கும். ஒரு
சிறு லாரி நிறைய அடைத்துக்கொள்ளும் அளவுக்குக் எழுதிவைத்த குறிப்புகள் இப்போது இருக்கின்றன என்றால் எழுதாமல் விடுபட்டுப்போனது இன்னும் எவ்வளவு இருக்குமோ?
நான் வாழ்க்கையில் மிகவும் regret செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று. .

                    போகர் ஏழாயிரத்தில் உள்ள விந்தையான குறிப்பொன்றுடன் முதலில் தொடங்குவோம்.

                    இந்தக் கதை எப்போது நடந்தது எனது தெரியாது. நடந்த இடம் கபாட புரம். அதாவது இரண்டாவது தமிழ்ச்சங்கம் நடந்த சமயம். அச்சங்கத்தில் அகத்தியருடைய சீடராகிய 'திரணதூமாக்கினி முனி' என்னும் தொல்காப்பியரும் இருந்தார். (நான் போகர் ஏழாயிரத்திலுள்ள கதையைத்தான் சொல்கிறேன். 'திரணதூமாக்கினி இது அது', என்று என்னைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கப்படாது.)

                    தொல்காப்பியருக்குத் தலைவலி. பத்தாண்டு காலம் இடைவிடாது தொடர்ந்து
தலைவலி. எத்தனையோ வைத்தியர்கள் முயன்றும்கூட அந்தத் தலைவலி தீரவில்லை. அகத்தியரை நினைத்தார்கள்.

                    அவரும் வந்தார். அவருடைய ஞானதிருஷ்டியில் பார்த்தார். காரணம் புலப்பட்டு
விட்டது.

                    ஹட யோகியரிடம் ஒரு பயிற்சியுண்டு. தண்ணீரை ஒரு நாசித் துவாரத்தில் ஏற்றி கபாலத்தில் உள்ள அறைகளிலெல்லாம் செலுத்திவிட்டு இன்னொரு நாசித்துவாரத்தின்
வழியாக வெளியே விடுவார்கள்.

                    இந்தப் பயிற்சிக்கு ஓர் உபயோகத்தை வைத்திருக்கிறேன்.
                    சாப்பிடும்போது புரையேறும். அவ்வாறு புரையேறும்போது தும்மல் வரும்.
அப்போது உணவுத் துகள்கள் நாசியின் உட்புறத்தில் மேலே சென்றுவிடும். மசாலா கிசாலா சமாச்சாரமாக இருந்தால் அதுவேறு
தொல்லை படுத்தும். அதனை flush out செய்து வெளியேற்றுவதற்காக வலது நாசியின் மூலம் தண்ணீரை இழுத்து மேலே கொண்டு
சென்று சற்று வைத்திருந்துவிட்டு, அதனை வேகமாக வெளியேற்றிவிடுவேன்.
மூன்று முறையாவது இவ்வாறு செய்துவிடுவேன். சரியாகிவிடும் - இதுவரை. (பயிற்சியற்றவர்கள் இதனைச் செய்து பார்க்கவேண்டாம். ஆபத்து).
                    அந்த மாதிரி பயிற்சியெல்லாம் தொல்காப்பியருக்கு அத்துப்படி
                    ஒருமுறை அவர் நாசியின் வழியாக இழுத்த தண்ணீரில் தேரை முட்டை இருந்திருக்கிறது. ஆலவிதையை 'சிறுமீன் சினையினும் நுண்ணிதேயாயினும்' என்று பழைய நீதி நூல் சொல்கிறது. தேரை முட்டை அதனினும் நுண்ணிது. ஆகவே நாசித்துவாரத்தின் வழியாக மூளைக்குச் சென்றுவிட்டது.
                    இப்போது இருக்கும் அனாட்டமி நூலின்படி ஏதாவது ஸைனஸிற்குள் நுழையலாம்
என்று சொல்லலாம்.

                    ஆனால் ஹடயோகியர்களின் கபாலம் எப்படியிருக்கும் என்று சொல்லமுடியாது.
ஏதாவது பயிற்சியின் மூலம் எதையாவது வாசலைத் திறந்துவைத்திருப்பார்கள்.

                    "சிக்குள்ள வாசல் திறந்ததடி; சிலம்பொலிதானும்தான் கேட்டதடி",
என்று காணாக்கண் கேளாச்செவி மூலம் காணமுடியாக் காட்சி, கேட்க முடியா ஓசையை உணர்ந்துகொண்டு பாடிக்கொண்டிருப்பார்கள்.
                    அந்த முட்டையிலிருந்து தவளை வெளிவந்து பெரியதாகிவிட்டது. அதுதான் அப்படியரு தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

                    தம்முடைய ஞானதிருஷ்டியினால் இதனை உணர்ந்துகொண்ட அகத்தியர், அறுவை சிகிச்சை செய்து தேரையை எடுக்கத் தீர்மானித்தார். அதனைப் பாண்டிய மன்னனின் பிரத்தியேக மருத்துவசாலையில் செய்தார்கள். தொல்காப்பியரின் தலையில் கபாலத்தைத் திறந்து
மூளையைக் கீறிப் பார்த்தார்கள். அங்கே ஒரு தேரை மூளையைப் பற்றியவாறு இருந்தது.

                    "எப்படி கபாலத்துக்குள்ளிருந்துகொண்டு பத்தாண்டுகள் ஜீவித்திருந்தது?"......என்று என்னிடம் கேட்பதில் பிரயோஜனமில்லை. அந்த சித்தை அறியவேண்டுமானால் 'கல்லினுள் தேரை'யையும் 'கருப்பை உயிரை'யும்தான் கேட்கவேண்டும். அவற்றுக்குப் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் தான் அந்த காலத்துள் தேரைக்கும் கொடுத்து வாழ்வித்திருக்கவேண்டும்.
                    அந்தத் தேரையை அகத்தியர் குறடால் எடுக்க முயன்றார்.
                    அதனை பார்த்துக்கொண்டிருந்த சீடர்களில் ஒருவராகிய பொன்னரங்கன் என்பவர் தடுத்தார். அப்படியே தேரையை எடுத்தால் அது மூளையைப் பிய்த்துக்கொண்டு வந்துவிடும்.
                    ஆகவே பொன்னரங்கனார் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் செய்தார்.
அந்தப் பாத்திரத்தைத் தேரையின் அருகே பிடித்தார். தண்ணீரைக் கண்ட தேரை உடனே மூளையை விட்டுவிட்டு தண்ணீருக்குப் பாய்ந்தது.

                    தொல்காப்பியரின் மூளைக்குச் சேதமில்லாமல் கபாலத்தை மூடிவிட்டார்கள்.
                    சமயோசிதமாக உத்தியைச் சொன்ன பொன்னரங்கனாரை அகத்தியர் பாராட்டினார். அத்துடன் அவருக்குச் சிறப்புப் பெயராக 'தேரையர்' என்னும் பெயரும் ஏற்பட்டது. தேரையர் பெயரால் பல வைத்திய நூல்கள் இருக்கின்றன.

                    சரி.
                    போகர் ஏழாயிரத்துக்கு வருவோம்:

    இட்டாரே சங்கத்துப் புலவர் எல்லாம்
        எழிலான திரணாக்கிய முனிவர் நோயை
    சட்டமுடன் தச வருட காலமையா
        தலைவலியும் சன்னியுடன் அதிகமுண்டு
    தொட்டவொரு பண்டிதங்கள் மெத்த உண்டு
        துரைராஜ சுந்தர்க்கு இலக்கோ இல்லை
    திட்டமுடன் தங்களது பண்டிதங்கள்
        திறமுடனே செய்வதற்கு வருந்திட்டாரே

திரணாக்கிய முனிவர் - தொல்காப்பியர்
பண்டிதங்கள் - மருத்துவ சிகிச்சைகள்; வைத்தியர்களைப் பண்டிதர்கள்
என்று அழைப்பார்கள். தஞ்சை அபிரஹாம் பண்டிதர் ஒரு பெரும் மருத்துவர்.
கருணானந்தர் வைத்தியசாலை என்ற பெயரில் நிறுவியிருந்தார். பலவகையான
மருந்துகளைத் தயாரித்தனர். இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில்
எழுதியிருக்கிறேன்.

    வருந்தவே அகத்திய முனிவர்தாமும்
        வல்லமையால் பண்டிதங்கள் மிக உரைப்பார்
    பொருந்தியே தேரையது மூளைதன்னை
        பொலிவான நாசிவழி தன்னில் சென்று
    வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
        வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
    மருந்தீய சிவனை தன்னை மனத்திலுன்னி
        மகத்தான அகத்தியரும் கவனித்தாரே

    கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு    
        கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
    மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
        மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
    புவனமென்ற குறடாவால் எடுக்கப்போனார்
        புகழான தேரையர் முனிவர் தாமும்
    சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்த்ரம்
        சாற்றினார் தேரையர்தாம் சாற்றினரே

    சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
        தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
    ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
        அங்கெனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
    நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
        நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
    "போற்றியே என் சீடா, பொன்னரங்கா
        பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே?"